ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஹாங்காங்கை சேர்ந்தவர்களை நாடு கடுத்தும் இரு நாட்டு ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், குடியுரிமை தொடர்பாகவும் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது.
மெல்போன்:
கொரோனா வைரஸ் தொடங்கி வர்த்தகம் உள்ளிட்ட பல விவகாரங்களில் ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது.
குறிப்பாக ஆஸ்திரேலிய அரசு நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் சீனாவால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனர். இந்த சம்பவங்கள் இரு நாட்டு உறவை மேலும் மோசமடையச்செய்துள்ளன.
இதற்கிடையில், ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியுள்ளது. இதனால் ஹாங்காங் மக்கள் பலர் தங்கள் நகரை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருபவர்களுக்கு பல நாடுகளுக்கும் அடைக்கலம் கொடுத்து வருகின்றன.