ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஹாங்காங்கை சேர்ந்தவர்களை நாடு கடுத்தும் இரு நாட்டு ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், குடியுரிமை தொடர்பாகவும் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது.
மெல்போன்:
கொரோனா வைரஸ் தொடங்கி வர்த்தகம் உள்ளிட்ட பல விவகாரங்களில் ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது.
குறிப்பாக ஆஸ்திரேலிய அரசு நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் சீனாவால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனர். இந்த சம்பவங்கள் இரு நாட்டு உறவை மேலும் மோசமடையச்செய்துள்ளன.
இதற்கிடையில், ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியுள்ளது. இதனால் ஹாங்காங் மக்கள் பலர் தங்கள் நகரை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருபவர்களுக்கு பல நாடுகளுக்கும் அடைக்கலம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், சைபர் தாக்குதல், வணிக நெருக்கடி உள்ளால் கோபமடைந்த ஆஸ்திரேலியா தற்போது சீனாவை ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அவை என்னவென்றால்,குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச்சென்றவர்களை சொந்த நாட்டிடம் ஒப்படைக்கும் வகையில் நாடுகளுக்கு இடையே நாடு கடத்தல் ஒப்பந்தங்கள் செய்துள்ளன.
அதேபோல் ஹாங்காங் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயும் இந்த நாடுகடத்தல் ஒப்பந்தம் நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் தற்போது சீனா தனது தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஹாங்காங்கில் அமல்படுத்தியுள்ளது.
இதையடுத்து ஹாங்காங் உடனான நாடுகடத்தல் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஹாங்காங்கை சேர்ந்த நபரை ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்த ஹாங்காங் நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கப்படாது.
இந்த நடவடிக்கை சீனாவுக்கு மிகுந்த எரிச்சலையூட்டியுள்ளது. ஏனென்றால் ஹாங்காங்கை சேர்ந்த சுதந்திரத்திற்கு ஆதரவான செயல்பாட்டாளர்கள் பலர் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஹாங்காங் நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது.
மேலும், ஹாங்காங்கில் இருந்து கல்வி மற்றும் வேலை நோக்கத்தில் ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்களின் விசா மேலும் 5 வருடங்களுக்கு நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 5 வருடங்கள் முடிந்த
பின்னர் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்த குடியுரிமை பெறலாம்.
ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கைகளான் சீனா மிகுந்த கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.